களஞ்சேரி வேத விவசாய பண்ணை

களஞ்சேரி வேத விவசாய பண்ணை

 அனேக நமஸ்காரம்,இப்பவும் ஆசார்யாள் அனுக்ரஹத்தாலும், வேத மாதாவின் அனுக்ரஹத்தாலும் நமது களஞ்சேரி வேத பாடசாலை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. ஆசார்யாளின் உத்தரவின் பேரில் களஞ்சேரி விவசாய பண்ணை ஒன்று ஆரம்பித்து செயல்பட்டு வருகிறது. இதில் பல ஊர்களிலிருந்து 135 பேர் சேர்ந்து களஞ்சேரியில் 125 ஏக்கர் விவசாய நிலம் வாங்கியிருக்கிறோம். இதில் விவசாயம் செய்யும் பொறுப்பை அனைவரும் என்னிடம் கொடுத்திருக்கிறார்கள்.

 

உங்கள் ஒரு குழு அமைத்து மிகுந்த ஈடுபாட்டுடனும், நம்பிக்கையுடனும் இயற்கையான உரங்களை இட்டு இதில் விவசாயம் செய்து வருகிறோம். மற்ற விவசாயிகளை போல் நாங்கள் இதில் ரசாயன உரங்களை அள்ளிக்கொட்டுவது இல்லை. பசுஞ்சாணம், கோமூத்திரம், சாம்பல், உரிமட்டை நார் போன்ற இயற்கையான உரங்களை அதிகமாக போட்டு சுத்தமான அரிசி தயார் செய்கிறோம்.
 
மாதம் ஒரு முறை பூ ஸூக்தம், ஆயுஷ்ய ஸூக்தம், ஒஷதி ஸூக்தம், ம்ருத்யுஞ்சய ஸூக்தம் போன்ற விசேஷமான ஹோமங்களை செய்து அதனுடைய பஸ்மாக்களையும் (சாம்பல்), கலச ஜலத்தையும் விவசாயம் செய்திருக்கும் வயல்களில் சேர்த்து விடுகிறோம்.
கிட்டதட்ட ரிஷிகள் விவசாயம் செய்த முறையில் நாங்களும் கடைபிடித்து செய்வதால் தான் இந்த அமைப்பிற்கு ஸ்ரீஆசார்யாள் எண்ணப்படி ‘‘களஞ்சேரி ரிஷி-க்ருஷி’’ என்று பெயரிட்டு இருக்கிறோம்.
இதில் விளையும் அரிசி, நிலச்சொந்தக்காரர்களுக்கு உரிய குத்தகை போக மீதி அரிசி அனைத்தையும் நமது மெம்பர்களுக்கு  மட்டும் விலைக்கு கொடுப்பதாக உள்ளோம். தற்சமயம் உள்ள நிலவரப்படி மாதம் 25 கிலோ வீதம் 360 முதல் 450 மெம்பர்களுக்கு மட்டும் விற்பனையை ஆரம்பிக்கலாம். அவரவர்கள் வீட்டிற்கே கொண்டுவந்து கொடுக்க இருக்கிறோம்.
தற்சமயம் நீங்கள் கடை களில் வாங்கும் அரிசியை  விட எத்தனையோ விதங்களில் இது மிகவும் உயர் வானது. மேலும் கிலோ ரூபாய், 55க்கு தங்கள் வீட்டிலேயே கொண்டு வந்து கொடுக்கிறோம். இத்துடன் சமைத்து பார்ப்பதற்காக அரிசி அனுப்பியிருக்கிறோம். தங்களுக்கு அரிசி பிடித்திருந்தால் நீங்களும் எங்களுடன் சேர்ந்து கொள்ளலாம். பதிவுக்கட்டணம் ரூபாய் 3600 கட்டி சேர்ந்து கொள்பவர்களுக்கு மட்டும் மாதம் 25 கிலோவிதம் 12 மாதங்களுக்கு விலை மாற்றம், தரம் அளவு பிரச்சனை இல்லாமல் வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கிறோம்.
மெம்பராக சேர்ந்தவர்கள் ஆயுள் முழுவதும் எங்களிடமிருந்து அரிசி பெறலாம்.
எப்பொழுது வேண்டுமானாலும் உறுப்பினர் அட்டையை ஒப்படைத்துவிட்டு பதிவுத் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது எங்களது டெலிவரி உள்ள வேறு ஊருக்கு மாற்றிக்கொள்ளலாம்.
அனுப்பும் அரிசி திருப்தியாக இல்லாவிட்டால் எந்தக் கட்டணமும் இல்லாமல் மாற்றிக் கொடுக்கப்படும் அல்லது பணம் திரும்பக் கொடுக்கப்படும்.
ஒரு ஆதார் எண்ணிற்கு (குடும்பத்திற்கு) அதிகபட்சமாக மாதம் 50 கிலோ மட்டுமே விற்கப்படும்.
ரஸாயன உரங்களை  அள்ளிக்கொட்டி விவசாயம் செய்து பளபளப்பாக கடைகளில் கிடைக் கும் அரிசியைவிட இயற்கை உரங்களை அள்ளிக்கொட்டி விவசாயம் செய்த தெய் வீகமான இந்த அரிசி தங்களுக்கும் தங் களின் குடும்பத்திற்கும், குழந்தை களுக்கும் நல்ல ஆரோக்யத்தையும், மன நிறைவையும் கொடுக்கும் என்று பூரணமான நம்பிக்கையுடன்.
தங்கள் விதேயன்
திரு. ஸீதாராமன்
7639588146
Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s