தமிழகத்தில் நடப்பது பிஜேபி ஆட்சியே-

Image may contain: 1 person
பாக்கிய நாதன்

தமிழகத்தில் நடப்பது பிஜேபி ஆட்சியே-

தமிழகத்தில் ஜெயலலிதாவின் திடீர் சுகவீனம் அவரின் அரசியல் எதிரி கருணாநிதிக்கு தான் பயனளிக்க வேண் டும் .ஆனால் அங்கேயும் சுருதி குறைந்து வருவதால் தேசிய கட்சிகள் இதை பயன்படுத்திக்கொள்ள நினைத் தது.இந்தியா முழுவதும் தன்னுடைய வேரினை ஆழ மாக ஊன்றிவரும் பிஜேபி தமிழகம் திராவிட முட்டாள் கூட்டத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து வருவதை கண்டு அதை மீட்டெடுக்க மாற்று வழிக்காக காத்திருந்தது.

ஒரு கட்சி அரசியலில் வெற்றி பெற இரண்டு வகையில்
செயல்படுகிறது.ஒன்று அதற்கு இயற்கையாகவே உண்டான ஆதரவை தூண்டி விட்டு வெற்றி பெறுவது
இன்னொன்று அந்த கட்சிக்கு ஆதரவு தளம் உருவாகும் வரை இன்னொருத்தர் தோளில் ஏறி நின்று அவர்கள் மூலம் வெற்றி பெற முயற்சிப்பது இந்த இரண்டும் தான்
ஒரு கட்சி தன்னுடைய அரசியல் செல்வாக்கை வளர்த்து
கொள்ள பயன்படுத்தும் பிளான்கள்.

பிஜேபியை பொறுத்தவரை வட மாநிலங்களில் அது
யார் தோளிலும் ஏறி நின்று சவாரி செய்ய வேண்டிய அவசியமல்ல.ஆனால் தென் மாநிலங்களில் கர்நாடகா வை தவிர ஆந்திரா.தெலுங்கானா,தமிழ்நாடு கேரளா
போன்ற மாநிலங்களில் கட்டாயமாக யாருடைய தோளி லாவது ஏறி நின்றால் தான் கட்சியை அடுத்தக்கட்டத்தி ற்கு கொண்டு செல்ல முடியும்..

தமிழகத்தை மாதிரி கர்நாடக மாநிலத்தில் மாநில அரசி யல் கட்சிகளுக்கு செல்வாக்கு கிடையாது.எப்பொழுதும் தேசிய சிந்தனைகொண்டவர்களாகவே காலம் காலமாக இருக்கிறார்கள். தீவிரமாக கன்னட வெறியை தூண்டி விடும் வாட்டாள் நாகராஜுக்கு கூட தேர்தலில் டெபாசிட் கிடைக்காது.அந்தஅளவுக்கு தேசிய கட்சிகளையே ஆட்சி யில் அமர்த்தி வருகிறார்கள்.

காலம் காலமாகவே காங்கிரசின் பிடியில் இருக்கும் கர் நா டகாவில் காங்கிரசுக்கு மாற்றாக கன்னடர்கள் தேர் ந்தெடுத்த கட்சி ஜனதா தான்.இதற்கு முக்கிய காரணம் ராம கிருஷ்ண ஹெக்டே தான் .இந்த தனி மனிதரின் செல்வாக் கினால் தான் ஜனதாவும் அதற்கு பிறகு ஜன தாதளமும் கர்நாடக விதான்சபாவில் ஆளும்கட்சியாக அமர்ந்தது இன்றைக்கும் ஜனதாவின் எச்சங்களாக சொல்லிக் கொள் ளும் தேவகவுடா வகையறாக்களுக்கு அரசியலில் உயிர்கொடுத்துக்கொண்டு இருப்பது.ராம கிருஷ்ண ஹெக்டே வின் புகழ் தான்.

ஹெக்டேவின் மறைவின் பலன் உடன டியாக தேவக வுடா கூட்டத்திற்கு தான் கிடைத்தது.ஆனால் நீண்ட நாள் பலன் யாருக்கு கிடைத்தது என்றால் பிஜேபி க்கு தான் .ஹெக்டே விற்கு பிறகு கர்நாடக அரசியலில் உண்டான வெற்றிடத்தை தெளிவாக பயன்படுத்திக்
கொண்ட பிஜேபி மூன்றாம் இடத்தில் இருந்து படிப்படி யாக முன்னேறி 2008 ம் ஆண்டில் ஆட்சியை பிடித்தது.

அதே மாதிரி ஒரு அரசியல் வெற்றிடம் தமிழகத்தில் உண்டாகும் பொழுது அது நிச்சயம் பிஜேபியால் நிரப்ப ப்படும்.இதற்குஉதாரணமாக சொல்ல வேண்டுமென்றால்
தற்பொழுது தமிழகத்தில் திரை மறைவில் நடந்துவரும்
ஆட்சியை சொல்லலாம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சுகவீனம் அடைந்து அப்போலாவில் அனுமதிக்கப்பட்டவுடன்தலைமையின் வழிகாட்டுதல் இல்லாமல் தடுமாறி நிற்கும் அதிமுகவை
தங்களின் பக்கம் இழுக்க காங்கிரஸ் நினைத்தது.இதற்கு
ராகுல் காந்தி பிளான் போட்டு வேலை செய்தார். இருந்தும் என்ன செய்ய..ராகுல் நினைப்பதற்கு மாறகவே எல்லாம் நடக்கும் என்பதற்கு தமிழக அரசியலும் ஒரு உதாரணம்.

என்றைக்கு ராகுல் காந்தி அதிமுகவுடன் உறவை புதுப் பிக்க அப்பலோ வந்தாரோ அன்றே அதிமுகவின் கண்ட் ரோல் சென்னையில் இருந்து டெல்லிக்கு போய்விட்டது
.இதன் முதல் படியாக பிஜேபி நினைத்தது மாதிரிபன்னீர்
செல்வம் பொறுப்பு முதல்வராக உருவாக்க ப்பட்டார்.இது
அதிமுக கட்சியில் பிஜேபியின் கை ஓங்கிவிட்டதை அறிந்து கொள்ளலாம்.ஏன் என்றால் தற்போதய அதிமுக
தலைமை சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கா ல முதல்வராக கொண்டு வர நினைத்திருந்தார்.

அடுத்து தமிழக ஆட்சியில் மத்திய அரசின்எண்ணங்கள்
தடையில்லாமல் நடந்து வருவதை கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்த ஒரு செய்திகுறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

செய்தி-1 உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு இணைவ தற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது..

இது தாங்க தமிழகஅரசின் முக்கியமான மாற்றம். ஏனெ ன்றால் தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களும் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது,ஆனால் ஜெயலலிதா மட்டும் இதைஏற்காமல் எதிர்த்து வந்தார். அதோடு குறை வேறு கூறி வந்தார்..இதனால் கடுப்பான மத்திய மின்சார அமைச்சர் பியூஸ்கோயல் டெல்லியில் ஒரு பேட்டி கொடுத்தார்.

அதில் என்ன சொன்னார் தெரியுமா?

எங்களுடைய மோசமான அரசியல் எதிரிகள் கூட அவர் கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் உதய் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டை பொறு த்த வரையில் எல்லாமே எதிர் மறையாக உள்ளது.எனவே அங்கு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே உதய் திட்டத்தை அமல் படுத்த முடியும் என்று தமிழக சட்ட மன்ற தேர்தல் நடப்பதற்கு முன் தெரிவித்து இருந்தார்..

ஆனால் தமிழக அரசியலில் கடந்த சட்டமன்ற தேர்தலில்
எந்த ஆட்சி மாற்றமும் நடக்க வில்லை.அதனால் ஜெய லலிதா தொடர்ந்து உதய் திட்டத்தை எதிர்த்து வந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசு தானாகவே மத்திய அரசி டம் உதய் திட்டத்தில் இணைகிறோம் என்று சொன்னது எதைக்காட்டுகிறது என்று நீங்களே சொல்லுங்கள்.
ஆட்சி மாற்றம்.ஏற்பட்டுவிட்டது என்று தானே அர்த்தம்.

செய்தி-2 வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் தேசீய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகம் முழுவதிலும் அமல் படுத்தப் படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்ட த்தை 2013 ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு அவசர சட்டமாக கொண்டு வந்த காலத்திலிருந்து கடந்த மாதம் வரை ஜெயலலிதா எதிர்த்து வந்தார்.ஆனால் இப்பொழுதோ தமிழக அரசு அந்தர்பல்டி அடித்து மத்திய
அரசிடம் தேசீய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல் படுத்துகிறோம் என்று அறிவித்துவிட்டது.

ஜெயலலிதா அரசு இந்த இரண்டு திட்டங்களையும் எதிர்த்து வந்த காரணம் வாக்கு வங்கி அரசியலே..நாடு
எவ்வளவு கடனாலும் பராவாயில்லை நமக்கு ஓட்டு கிடைக்க வேண்டும் என்று குறுகிய அரசியல் கண்ணோ ட்டதினால் தான் இந்த திட்டங்களை தமிழக அரசு எதிர்த்து வந்தது.

ஆனால் இப்பொழுது இந்த திட்டங்களை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதன் மூலம் தமிழக ஆட்சியின் அதிகாரம்
மத்திய அரசின் கைக்கு சென்று விட்டது என்றே சொல் லலாம்.இதனால் தமிழகம் வளர்ச்சி பாதைக்கு செல்ல
ஆரம்பிக்கும்.அது மட்டுமல்லாமல் இனி பாருங்கள்
வரிசையாக ஜிஎஸ்டி ஆதரவுஅடுத்து புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு என்று தமிழகம் மத்திய அரசோ டு இணைந்து பயணிக்க ஆரம்பிக்கும்.

சரிப்பா..இதனால் நீ என்ன சொல்ல வருகிறாய் என்று நீங்கள் கேட்பது இங்கு எனக்கு கேட்கிறது..அதாவது
அதாவது அதாவது…அதாவது..அதாவது அதாகப்பட்டது
என்னவென்றால்….

நாங்க இப்ப தமிழகஆட்சியை கைக்குள் கொண்டு வந்து விட்டோம் இனி அடுத்து கட்சிதான்.அதனால் இனி இலை சுருங்கி தாமரை விரிய ஆரம்பிக்கும் காலம் விரைவில் வரும்.அதோட இன்னும் சில வருடங்களில் பிஜேபி தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருக்கு ம் என்பது மட்டும் நிச்சயம்…

நன்றி Vijayakumar Arunagiri

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s