திருவாசகம்

15267685_805285302947467_7815351118709576252_nகத்திற்கு உருகாதோர், ஒரு வாசகத்திற்கும் உருகார். இது பழமொழியாக இருந்தாலும், வரும் தலைமுறைக்கான பசுமைமொழி. பக்தி ரசம் சொட்ட, சொட்ட எளிய இனிய நடையில் திருவாசகத்தை, மாணிக்கவாசகர் அளித்துள்ளார்.

இதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியே, தனது தலையாய பணி, என பள்ளி மாணவர்களை, முதிர் வயதிலும் தேடிச் செல்கிறார், மதுரை தபால் தந்தி நகரரை சேர்ந்த பிச்சையா (வயது 71). இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி கணக்கு அலுவலராக பணிபுரியும் போது, திருவாசகத்தால் ஈர்க்கப்பட்டதால், பணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்து, திருவாசகத் தூதுவராக மாறினார். தற்போது நாகர்கோவிலில் வசித்து வருகிறார்.

திருவாசகம் என்பது வழிபாட்டு சிந்தனை மட்டுமல்ல. பணிவு, அன்பு, அறிவு இவற்றைத் தான் மாணிக்கவாசகனார் திருவாசகத்தில் வெளிப்படுத்தியுள்ளார், என்கிறார் பிச்சையா.

இவரது கால்படாத பள்ளிகளே மதுரை மற்றும் குமரி மாவட்டத்தில் இல்லை, என சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு பள்ளியிலும், விரும்பிய மாணவர்களுக்கு திருவாசக புத்தகத்தை பள்ளிகளுக்கு சென்று, இலவசமாக வழங்கி, அதிலிருந்து போட்டி வைத்து, மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறார்.

யாருடைய உதவியும் இன்றி, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், முதிர் வயதிலும் தனது திருவாசகப் பணியை தேனீயாய் செய்கிறார்.

ஒவ்வொரு கிராமத்திலும் திருவாசகம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் நல்ல இளைஞர்களை உருவாக்கும் பணி உள்ளது. 2002 முதல் அரசு பணியை விட்டுவிட்டு, இதை செய்து வந்தாலும், 2008 முதல் மணிவாசகர் அறக்கட்டளை உருவாக்கி, பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிப்பதுடன், திருவாசகத்தையும் மாணவர்கள் மனதில் மெழுகுவர்த்திரி போல் ஏற்றி வைக்கிறேன். 9 மாவட்டங்களில் திருவாசகம் போட்டி நடத்தினேன். உயிர் இருக்கும் வரை மாணவர்கள் மத்தியில் திருவாசகத்தை கொண்டு செல்வேன், என்கிறார்.

(தினமலர் நிஜக்கதை பகுதியில் இவரைப் பற்றி நண்பர் முருகராஜ் செய்தி வெளியிட்டுருக்கிறார்.)

இவரின் நட்பு நமக்கு குடைத்து நான்காண்டுகளாகிவிட்ட போதும் அலைபேசுயில் தான் பேசிக்கொள்வோம். நேரில் சந்தித்ததில்லை. ஆனாலும் ஏதோ பல ஆண்டுகள் பழகியதை போன்று ஒரு உணர்வு – இருவருக்குமே இருந்தது.

இன்று நாகர்கோவில் பயணத்தில் இவரை சந்தித்தோம். இருவரும் இயற்கை எழில் கொஞ்சும் கருப்பக்கோட்டை கைலாய மகாதேவர் ஆலயத்திற்கு ஒன்றாக சென்றோம்.

சன்னதியில் ஹைபிட்ச்சில் சிவபுராணம் பாடி மெய்சிலிர்க்க வைத்தார்.

Rightmantra Sundar
Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s