எண்ணெய் வளங்களை ஒருங்கே கொண்ட மொத்த முஸ்லீம்நாடுகளும் ஒற்றுமையாக இருந்திருந்தால்…

எண்ணெய் வளங்களை ஒருங்கே கொண்ட மொத்த முஸ்லீம்நாடுகளும் ஒற்றுமையாக இருந்திருந்தால்…

அமெரிக்கா என்றைக்கோ பிச்சைக்கார நாடாகி திருவோடு ஏந்தி இருக்கும்.

இன்றைக்கும் அமெரிக்கா பிழைத்து வருவது எண்ணெய் விற்பனைக்கு ஷேக்குகள் அமெரிக்க டாலரை உபயோகிப்பதால் தான்.

ஈராக்கைச் சுற்றியுள்ள மற்ற முஸ்லீம் நாடுகளின் முழுமையான ஆதரவுடனேயே அமெரிக்கா அந்நாட்டை அழித்தது என்றால் மிகையில்லை.

அதிபர் சதாம் உசேனின் படுகொலைக்கு அதே மதத்தைச் சேர்ந்தவர்களே காரணம் ஆனார்கள். ஏன், சுன்னி ஷியா பிரிவினை.

ஆனால் இவர்கள் வெளியே சொல்லிக் கொள்வதோ ஒரே இறைவன், ஒரே மதம், ஒன்றான மக்கள் என்றுதான். !

ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறிக்கொள்ளும் இவர்களுக்குள் எத்தனைக் கொடிய கொலைகள்.

அப்பாவி மக்களும் ஊடகங்கள் கூறுவது போல இந்துக்கள் மட்டுமே சாதிப்பிரிவினை கொண்டு சண்டை இட்டுக் கொள்கிறார்கள் என்று நம்பி ஏமாந்து போகிறார்கள்.

வெறும் ஆயிரம், இரண்டாயிரம் வருடங்கள் கொண்ட மதங்களுக்குள்ளேயே இத்தனை பிரிவுகள் இருக்கின்றன.

பலஆயிரம் வருட பாரம்பரியம் உள்ள இந்துக்களின் வாழ்கையில் 1280 வகையான மத புத்தகங்கள் உள்ளன.

பல ஆயிரம் வகையான சொற்பொழிவுகளும், சொற்பொழிவாளர்களும் இருக்கிறார்கள்.

எண்ணிலடங்கா கடவுளர்கள் உள்ளனர்.

பல வகையான மகான்களும், ரிஷிகளும், சித்தர்களும் இருக்கின்றனர்.

பல்வேறு வகையாக தத்துவங்கள் போதிக்கப்படுகின்றன.

இந்து தர்மத்தின் படி வாழும் மக்கள் நூறுக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் பேசும் மக்களாக இருக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன.

இந்துக்களில் மாரியம்மனை கும்பிடுபவர் முருகனை அவமதிப்பதில்லை.

பிள்ளையாரைக் கும்பிடுபவன் ஐயப்பனை வெறுப்பதில்லை.

விஷ்னு பக்தன் ஆயினும் சிவன் கோவிலுக்குப் போகாமல் இருப்பதில்லை.

சிவன் பக்தனாயினும் திருப்பதிக்குப் போய் வழிபடாத இந்துக்கள் இருக்கமுடியாது.

ஏன் இந்துக்கள் வேளாங்கன்னி மாதாவையும், நாகூர் தர்காவையும் கூட ஒரே கடவுளின் தோற்றமாகவே பார்க்கின்றனர்.

பல நூறு கடவுளர்களை வழிபடுபவராயினும் இந்துக்களுக்கு எல்லாம் கடவுளே!

அதாவது அடிப்படையில் ஏகத்துவம்! “ஏகன் அநேகன் இறைவனடி போற்றி” என்கிறது சிவபுராணம்.

ஒரே மதம், ஒரே தேவன் என்று சொல்லிக்கொண்டு ஒரு நாட்டையே பிரிவினையால் அழிக்கும்…

பிற மதத்தவரை விட பல நூறு கடவுளரைக் கொண்டாலும் ஒரே கலாச்சாரம் ஒன்றான வாழ்க்கை என்று அமைதியாக வாழும்…

இந்துக்களை மட்டும் சாதிப் பாகுபாட்டுக்கு காரணமென்று கூறுவது ஏற்புடையதல்ல.

ஆக முடிவாக, சாதிப் பிரிவினைகளுக்குச் சமய மாரக்கங்கள் அல்லது கடவுள் எனக்கூறுவது அபத்தம்.

சாதியவர்க்கப் பிரிவினைகளுக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைக் கொண்ட மனிதரே காரணம்…!!!

Natesan Nadar

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.