HILARIOUS RECOUNTING OF MODERN SLAVE OFFICE AMBIANCE

Image may contain: 2 people, people smiling
Swaminathan Ramasubramanian

ஆஃபீசும் வடிவேலுவும்
—————————————————————
எல்லார் ஆபீஸ் வாழ்க்கையிலும் எவ்வளவு தான் டென்ஷன் இருந்தாலும் , என்ன பதவியிலும் இருந்தாலும் எல்லா துறைகளுக்குமே சர்வரோக நிவாரணியாய் இருப்பவர் நம்ம வடிவேலு தான்.அவருடைய டயலாக்குகளை நேரிடையாகவோ,மறைமுகமாகவோ இன்னிக்கும் சொல்லி சிரிப்பது வழக்கம் . போர்ட் மீட்டிங், மேனேஜ்மன்ட் ரெவ்யு மீட்டிங் என்று பல இடங்களில் மைண்ட் வாய்சும் சரி ,வெளி குமுறலும் நடந்து இருக்கிறது. சில பல நிகழ்வுகள்.

1) நம்மிடம் இதுக்கு மேல டேட்டா இல்லைன்னு தெரிஞ்சும் மேலும் பல தகவல்களை கேட்டு கிட்டே இருக்கும்போது ‘நல்லா கேக்குராங்கடா டீடைலு”.

2) சில பிரக்ரிதிகள் உண்மை நிலைமைய சொல்லாம பாசுக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே பேசி ஃபிலிம் போடும்..அவங்க ப்ரெசெண்டெஷன் எப்படிரா போச்சுன்னு கேட்கும்போது ‘ஐ ஆம் சிங் இன் தி ரெயின், ஐ ஆம் சொய்ங் இன் தி ரெயின்’ அப்படின்னு பாடுவதும் உண்டு.

3)அளவுக்கு மீறி மீட்டிங்கில் அன்னிக்கு நேரம் சரியில்லாம அடி மேல் அடின்னா மனசு ‘ வேணாம் , வேணாம், வலிக்குது .. அழுதுடுவேன்” – அதிகமா பயன் படுத்துவது இதை தான்.

4) ‘போன மாசமும் இதே மாதிரி தானே இருந்தீங்க , இந்த மாசம் ஒரு முன்னேற்றமும் இல்லையே என்றால் மைண்ட் வாய்ஸ் ‘அது போன மாசம்’. .

5)சில சமயம் சீ இ ஓ போன்ற பெருந்தலைகள் மீட்டிங்கில் இருந்தால், முன்னாடி ஸ்லாட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து ‘ எவ்வளவு டார்கெட் கமிட் பண்றன்னு கேப்பாரு, ‘அடிச்சே கேட்டாலும் சொல்லாதீங்க’. இன்சென்டிவ் தரேன்னு உற்சாகபடுத்தியும் கேட்பாங்க,அப்படியும் சொல்லிடாதீங்க’.. எல்லாத்தையும் எழுதி நோட் பண்றாரு’ .. நம்மாளுங்க திருப்பி சொல்லுவாங்க ‘ நல்லா கிளப்புரீங்கடா பீதிய’.

6) சில சமயம் வெளியே வந்தவன் ‘ மச்சான், பிரிச்சு மேஞ்சுட்டாண்டா”. அப்ப சொல்லப்படுவது ‘ அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளுவு காயம்னா, அடி வாங்கினவனோட கதி’..

7) மச்சி, ஏப்ரல்லேந்து உங்க டிபார்ட்மெண்டுக்கு வரலாம்னு இருக்கேண்டான்னு சொல்லும்போது ‘ டேய், இது ரத்த பூமி, ப்ளட் ஃபீல்ட்’.. பீ கேர்புல் .. நான் என்னை சொன்னேன் ”

8)சில நாட்கள் ஆரம்பம் முதல் எல்லாமே தப்பு தப்பா வரும். அப்போ ‘அய்யோ! இன்னிக்கு இம்புட்டு ரோலிங் ஆகுதே”. எப்படி சமாளிச்சாலும் சில நாள் ஒவ்வொரு ஸ்லைட்லையும் மாட்டிக்க நேரிடும் அப்போ ‘ உஷ்… ஷப்பா..மு..டி..ய..ல.. எப்படி போனாலும் கேட் போடறானே’

9) சில பெரிசுங்களுக்கு ஞாபக சக்தி ரொம்ப அதிகம். போன மாசம் வேற நம்பர்
கொடுத்தயேன்னு கரெக்டா கையும் களவும் பிடிச்சுருவாங்க .. அப்ப நம்ம நண்பர்கள் சொல்லுவாங்க ‘வரலாறு மிக முக்கியம் அமைச்சரே’.

10) சில சமயம் எல்லாமே சூப்பரா அமைஞ்சிட்டு இருக்கும். திடீர்னு அவங்க கூட்டாளி ஒருத்தன் நம்ம வீக் பாய்ன்ட்ட நோண்ட ஆரம்பிப்பான். ‘ நல்லா தானே போய்கிட்டு இருக்கு’ இது மைண்ட் வாய்ஸ்.

12) என்னப்பா நேத்திக்கே டேட்டா கேட்டேன் இன்னும் அனுப்பவே இல்லையே . வருமா ?. அதுக்கு சொல்லுவாங்க — வரும் .. ஆனா…. வராது.

11) சில சமயம் டிபார்ட்மெண்ட்களுக்கு இடையே ஒரு பனிப்போர் போய்கிட்டு இருக்கும். நமக்கு வேணுங்கற ஆட்கள அவங்க வச்சுக்கிட்டு தரமாட்டாங்க.. பாஸிடம் முறையிடும்போது ‘கடுப்பேத்துறார் மை லார்ட்’.
பாஸ் சொல்லியும் ஒன்றும் நடக்காதபோது ‘ ஹி ஹி. தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை .. …” என்று பம்முவது இயல்பு தானே.

12) சில பேர் இருபது ஸ்லைடு வச்சு ப்ரெசண்ட் பண்ணுவான். ஒரே ஜார்கன். ஒண்ணுமே புரியாது. எங்கள் சமூகத்தில் இதற்கு பெயர் கேஸ் (gas). ஏய் இவன் என்னடா சொல்ல வரான் என்று கேட்டால்
‘க க க போ’..

13)சார், உங்களுக்கென்ன .. சும்மா பூந்து விளையாடுவீங்க.எல்லா பாராமீட்டர்ஸும் சூப்பரா இருக்கே, இப்படி சொன்னா, ‘உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பே ரணகளமா ஆயிருச்சே”

14) எல்லா ஆபீசிலுமே பாஸுக்கு எண்ணெய் தேய்த்து , சோப் போட்டு பிழைப்பு நடத்த ஒரு தனி கூட்டமே இருக்கும்.மனசுக்குள்ள சொல்லிப்போம் ‘ சார் நீங்க எம் ஜி ஆர் மாதிரி சும்மா தக தகன்னு மின்னுரீங்க சார்”.

15)அபூர்வமாய் சில புத்திசாலிகள் மாத்தி யோசிச்சு புதுசா ஏதாவது ஐடியா கொடுக்கும்போது, இது ‘ அக்கா மாலா’ இது ‘கப்சி” என்று சிரிப்பதும் உண்டு.

16) சில பேர் சொல்ல வேண்டிய விஷயங்களை நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைத்து, ஒவ்வொன்றாக விவரித்து முடிப்பதற்குள் பின்னால் கேட்கும் ஒரு சத்தம் ‘ அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்’

17)கார்ப்பரேட் மீட்டிங்குகளே பெரும்பான்மையான நேரம் வெட்டி தான். எந்த நோக்கத்துக்காக கூடினோமோ அதில் ஒன்றுமே நிறைவேறாமல் கலைந்து போகும்போது
சு நா பாநா, சுப்ரீம் கோர்ட்டே வந்தாலும் ஒன்ன அசைக்க முடியாதுடான்னு சொல்வதுண்டு.

18)ப்ராசஸ், க்வாலிட்டின்னு ஒரு கூட்டம் பிழைப்பை நடத்திக்கிட்டு இருக்கும். ஒரு மிஷ்டேக் ஏன் வந்தது என்பதை ஜப்பானிய முறையில் ஆராய்வார்கள். ஆர் சி ஏ என்ற செயலில் ஒய், ஒய் , ஏன் ஏன் என்று ஐந்து முறை கேட்டால் விடை தெரிந்து விடும் என்பது சித்தாந்தம்.. சில சமயம் ஐந்து முறை கேட்டாலும் ஒரே பதிலை தான் சொல்வார்கள்.. ‘திரும்ப திரும்ப பேசற நீ ! என்ன கைய பிடிச்சு இழுத்தியா’ என்று சொல்ல ‘ ஏம்பா நான் சரியாதானே கேட்கிறேன்’ என்று கூத்தடிப்பதும் உண்டு..

19 )ஒரு பாடாவதி கஷ்டமர் திடீரென்று ஒரு நாள் சர்வே எடுத்ததில் பத்துக்கு பத்து கொடுத்து அசத்த நாங்கள் பயன்படுத்துவது ‘நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்’ . ஏதோ ஒன்றிரண்டு இம்ப்ரூவ் செய்ய யோசனைகள் கொடுத்திருப்பார். உடனே
‘டெபெநெட்லி டெபெநெட்லி” என்பதும் நிச்சயம்

20 ) சில சமயம் டீமில் சில முந்திரிக்கொட்டைகள் ‘நான் அதை சால்வ் பண்ணட்டுமா’ என்று சொல்வார்கள்..ஹை எனெர்ஜியாம்.. இவன் கைய வச்சா இன்னும் ஆயிரம் தவறுகள் புதிதாக உருவாகும். அப்ப ‘ ஆணியே பிடுங்க வேண்டாம்’.

21) மாதகணக்கில் பெஞ்சில் இருந்தவர்களை, ஒவ்வொரு ப்ராஜெக்ட்டா சான்ஸ் கொடுத்து பார்ப்பாங்க.. ‘இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்’ அப்படின்னு ஒவ்வொருத்தனா கழட்டி விடுவாங்க. காரணமே சொல்ல மாட்டாங்க . அவங்களும் கடைசில ‘ முன்னெல்லாம் கழட்டி விட்டாங்கன்னா ஒரு காரணம் இருக்கும் , அது மனசுக்கு ஒரு ஆறுதலா இருந்துச்சு . இப்பல்லாம் காரணமே இல்லாம அனுப்புறாங்களா , எதுக்குடா சரிபட்டு வரமாட்டோம் . இது தெரியாம மனசு கடந்து உறுத்துமே…. இது அவங்க மைண்ட் வாய்ஸ்

வடிவேலு மட்டும் தன் சொற்றொடர்களுக்கு ராயல்டி கேட்டிருந்தார்ணா, இந்நேரம் தொழில் துறையே முடங்கி போயிருக்கும்

Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s