வாழ்க்கை அதன் விளக்கம,் இருந்தோம், இருக்கிறோம், இருப்போம் என்பதா

கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை, மார்க்க நம்பிக்கை, இதை ஏதோ ஆத்மார்த்தமாக, சம்பிரதாயமாக, ஓரு சடங்காக, அல்லது ஊரோடு ஒத்து வாழ் என்ற பயத்தினால், நமக்கும் அதாவது ஒரு சராசரி இந்துக்கும் மற்ற மார்க்கத்தினருக்கு என்ன வித்தியாசம்ன, நாம் இப்படி ,உனக்கு எது விருப்பமோ, நியாயமோ, நல்லதா படுதோ, ஏன் எது சௌகரியமாக படுதோ அதை செய், நமக்குள் சித்தாந்த விதமாக பல வேறுபாடுகள் ,இப்படி வைஷ்னவா, சைவா, சிவாச்சாரியார், அத்துவைத, த்வைத் , விசிஷடாத்வைத, ஆண்மிகவாளர் பகுத்தறிவாளர் இப்படி என்று, நாம் ரொம்ப பெருந்தன்மையான போக்கு, சகிப்புத்தன்மை, அளவுக்கு அதிகமான சுதந்திர சிந்தனைகள், அதே போல் சில வேண்டத்தகாத, நடைமுறையில் ஏற்க முடியாத சில சமுதாய சடங்குகள் அந்த காலத்தில் இப்படி சில, பால்ய்விவாகம், தீண்டாமை, இளம் விதவை சதி, அல்லது சமுதாயப் புறக்கணிப்பு, முன்பு ஆணுக்கு எதிலும் முன் உரிமை என்று. ஆனால் மற்றவர்கள் இதை இந்த நேரத்தில் இப்படித்தான் என்ற கட்டுக் கோப்புக்குள் மட்டுமே, அதை தாண்டி எதுவும் செய்யாதே செய்யக் கூடாது என்று. எல்லாம் இப்படித்தான் என்று வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்குள்.

இங்கு வெள்ளிக் கிழமை பிராரத்தனை முடிந்து, பயான் என்ற சொற் பொழிவில் மத மார்க்க விளக்கத்தில அவர்கள், அப்பப்ப , ஏன் எதனால் இது அதாவது அவரகளது மார்க்கம் உயர்வு என்று, இதை இப்படி இப் படித்தான் செய்ய வேண்டும் என்பதால், அப்படி செய்வதால், மறு வாழ்வில் பெறப் போகும் நலன், அப்படி செய்யாதததால் மற்றவர்கள்(இதை ஏற்க மறுப்பவர்கள்) பெறப் போகும் தண்டனை என்ற பல வார்த்தைகள், இதை சொல்ல அவர்களுக்கு அவர்கள் இடத்தில்,அவர்கள் மத மாரக்க நம்பிக்கையின் படி உரிமை உண்டு. அவர்கள் ,அவர்களுடைய அடிப்படை நம்பிக்கைகளில் மிக தெளிவாக இருக்கிறாரகள், அதாவது ஒரு குறைந்த பட்ச தெளிவு, அதில் தான் நாம் வேறுபாடுகிறோம்.

நம்மைப் பற்றி ,நம்மவர்களில் பலருக்கும், நம்மைச் சாராத பலரது அப்பிப்ராயம், இந்துன்ன அவன் சிலையை கூப்பிடுவான் என்ற அளவில் தான், ஆனால் உண்மையில் அதுவல்ல இந்து மதம், இது ஒரு சனாதன தர்மம், நம்மிடம் இல்லாத வழிமுறைகள், வேதாந்தங்கள், ஆன்மீக, மெஞ்ஞான விளக்கங்கள், மிக அறிவார்த்தமான், ஆத்மாரத்தனமான தத்துவங்கள், வேறு எங்கும் இல்லை, எனவே அதில் புதைத்து கிடக்கும் உண்மைகள், ஆனால் இவைகளின் குறைந்த பட்ச அறிவு சாமான்யர்களிடம் போய் சேர வேண்டும், அறிந்தவன் அறியாதவர்களுக்கு விளக்கம், நான்கு வேத, உபநிஷத்துக்களின் சாரமான பகவத் கீதையை எலிமென்டரி் பள்ளி்நிலையில் குழந்தைகள் மனதில் பதியும் மாறு, பசுமரத்தாணிப் போல பதிவு செய்ய வேண்டும், அப்படி செய்தால் தான் எதிர் காலத்தில் பல விவேகானந்தர்கள், அதனால் மீண்டும் இந்து மத மறு மலர்ச்சி என்ற Religion is the manifestation of divinity already in man

Raghunathan Sundararaman

 

சல்நா ஜீவன்கா கஹானி ருக்நா மோத்க நிஷானி அது தான் இந்த நீர்க்குமிழி வாழ்க்கை ,எல்லாவற்றுக்கும் அத்தாட்சி நேரம் ,அது அனைத்தையும் நடந்தது,நடக்கிறது நடக்கப் போவது எல்லாவற்றையும் ஒரு வார்தையில் எல்லாம் வெறும் நினைவுகள்,இந்த நினைவுகளின் தொடர்ச்சி அதன் பெயர் வாழ்க்கை ,எல்லாம் எல்லாமே எண்ணங்களின் வெளிப்பாடுகள் தான் ,நாம் கதை பேசும் சொர்க்கம் நரகம் என்று எதுவும் இல்லை, கற்பனைக் கதைகள் அப்படியே இருந்தாக,இருக்கிறதாக இருக்கப்போவதாக நினைத்தாலும் அதுவும் வெறும் எண்ணங்களின் வெளிப்பாடுதான் நீ உன்னையே சுகப்பட்டதாகவோ துக்கப்பட்டதாகவோ நினைக்கிறாய்

இல்லாததற்கு இருக்கின்றதாகவோ இருக்கிறத்துக்கு ,இல்லாத நிலை என்று இல்லை

ஜீவன் புலப்படாமல் புறப்பட்டு, மீண்டும் புறப்படாத நிலை நடுவில் காணபது வாழ்க்கை என்ற நாடகம்.

இந்த சரீரத்தை விட்டு உயிர் பிரியும் முன் எதை நினைக்கிறாயோ ,அதுவே தொடர கதையாக அடுத்த வாழ்க்கை, இதற்கு முடிவில்லை ,எண்ணங்கள் தொடரும் வரை.

Raghunathan Sundararaman

21 06 2017 wednesday

இன்று யோகா தினம், நான் போன வருடம் இது பற்றி ஹந்து பத்திரிக்கையில் எழுதியதை இத்துடன் இனைத்து உள்ளேன, யோகா வேறு ,யோகாசனம் வேறு, அதாவது முதலில் உடலை கட்டுப்பாட்டில், நமது உணர்வுளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உடல்ரீதியான ஆசனங்கள், அதன் மூலம் யோக நிலையை அடைதல், ஒன்றாக கலத்தல், இயற்கையுடன், இறைவுனர்வுடன், இந்த ஜீவாத்மா பரமாத்மா வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றே , விஞ்ஞானரீதியாகவும் இந்த குண்டலீனி நீர் இயற்கையின் அடையாளம் மிக சின்ன அளவில் micro of macro என்று.

மருத்துவரீதியாக சர்வ நிவாரனி, முக்கியமாக இந்த சர்வாங்காசனம் savaggasana ,அத்துடன் பத்மாசனத்தில் பிரனாயாம்ம், ஆனால் யோகாவின் முழுப் பலனை அடைய, கடைப்பிடிக்க வேண்டிய நியம்ம், மன ஒழுக்கம், உடல் ஒழுக்கம் அப்பவே அதன் முழுப் பலன், இல்லா விட்டால் ,தொழில் ,வியாபாரத்துக்காக சினிமா நடிகைகள் செய்வது போல வெறும் உடல் ஆசனம் தான் அது, ஆனால் அதுவல்ல அதன் நோக்கம் ,அதன் நோக்கம் மிகப் பெரிய குறிக்கோள்களை அடையும் இலக்காக நம்து ரிஷிகள், சித்தர்கள் போல ஆண்மிக வாழ்க்கை.

thehindu.com ·
The word yoga means union and it is an union of individual consciousness with universal consciousness or individual soul with cosmic soul and it has been described in Hinduism as self-realization or jeevan mukti and Buddhism as Nirvana. To achieve this one has to cross many hurdles, obstacles and struggles to control his own nature the most primary is purifying one’s body and mind. The sound mind in a sound body so the physical asana called Hatha Yoga for sound physical health and foundation to elevate one further. One consciousness level is directly controlled by how one breaths and it has been scientifically proved so we are practicing pranayama. Our Vedas, Vedic civilization and ancient spiritual texts reveals many secrets ,yoga is one of the priceless gift, living secret and regular can make miracles in the physical health and also helps us to achieve what we are, and then we diminishes, then slowly I then pure bliss and cosmic consciousness and let us all practice yoga every day.
Raghunathan Sundararaman

Image may contain: 1 person, smiling, standing, shoes and indoor

சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை, முத்து முத்து ஆசை, ஆசைகள் யாரை விட்டது யாரது மடத்தனமாக ஆசை அறுமின்கள் என்று, ஆண்டவன் படைத்தான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி் வைத்தான், தர்மத்திறகு விரோதமான ஆசைகளை தவிர ,மற்ற ஆசைகளில் தவறு இல்லை என்று கீதை அருளிய கண்ணன் ,இப்படி அழகான ஆரோக்கியமான சிந்தனைகளுடன் கூடிய ஆசைகளால ,அதை அனுபவிப்பதில் ஆனந்தம் ,அதனால் மன நிறைவு,, அதனால் மேற் கொண்டு செய்ய வேண்டிய காரியங்களில் ஆக்கம் ஊக்கம.

இந்த சந்தோஷம் ஆனந்தம் அவரவர் மனசு போல ,அதில் கசப்பான பதிவுகளை ஒதுக்கி விட்டு ,இனிமையாவைகளை மட்டும்,

வீட்டில் சொல்லாமல் காவேரி ஆற்று வெள்ள காலத்தில் அங்கங்க நீர் தட்டு, சில இடங்களில் தண்ணீர் ஆழம் ,புதை மணல் கடந்து குணசீலம் பிரசன்ன வெங்கடேசா, அவரது நோயாளிகள்,சித்தப் பிரமை அவரகளைப் போல மோனோ ஆக்டிங், பக்கத்தில் உள்ள பெருமாள் கோயில், வடை மாலை, புளியோதரை,அத்துடன் சக கிராமத்து நண்பிகள் உடன் நக்கல் கிண்டல், வருடம் ஒரு முறை ராமகிருஷண பரமஹசர் ஜயந்தி அன்று அங்குள்ள ராமகிருஷ்ண தபோவனத்தில் அனைவருக்கும் அதன் நிர்வாகத்து உட்பட்ட நான் படித்த விவேகானந்த உயர்நிலைப் பள்ளி நல்ல உயரதர கைகுத்தல் அரிசி சாதம், தாராளமாக நெய், காய்கறிகள், பெரிய மர டம்ளர்களில் இந்த வெல்ல பருப்பு பாயாசம், கறிவேப்பிள்ளை கொத்துமல்லி, பெருங்காயம் கலந்த மனக்கும் மோர் , சாப்பிட முடியாம சாப்பிட்டு நிறைமாத கர்ப்பினியாக பக்கத்து காவேரி ஆற்று படுகையில் ஒதுங்குதல், ஆடி பதினெட்டு் காவேரி் கரை புரன்டு ஓட, அப்ப ஓடிச்சு, மாலையில் பல சித்திர அன்னங்கள் குளியல் கும்மாளம். இப்படிப். பல

விஸ்தாரமா தாருகானேஸ்வர் பிருந்தாவன பூங்காவில் நடை, வீட்டு மேலே மொட்டை மாடியில் அண்ணாவுடன் அண்ணி அனுப்பும் இரவு டிபன் காபி, அப்பப்பா பெருகமணி சைக்கிள் பயணம் ராழுடு ஐயர் ஓட்டல் டிபன், சிறுகமணி தியேட்டர் மணல் தரையில் சினிமா, பக்கத்து ஆத்து ,இல்லை வீட்டு நண்பர்களுடன் தேங்காய் மாங்காய, கொய்யா சூறையாடல் ,டிரயின் டிரைவருக்கு விற்பனை, வரும்படி, ஜீயபரம் கொடியாலம் பெருமாள் கோடை உற்சவம் சித்திர அண்ண பிரசாதங்கள்,பல தீக்குச்சிகள் தீர காற்று காலத்தில் காவேரிக் கரையில் சிகரெட்,

வேலை தேடி இல்லை வேலைபூர்வமாக பல ஊர் பஸ், ரெயின் பயணம் இந்தியாவில் தெற்கு வட்கோடி, மேற்கு கழக்கு குறுக்கமாக பல ஊர்கள், மக்கள் ,உணவு சம்பாஷனைகள்

இப்படி நான் எழுதிக் கொண்டே ஈராக்கில், சவூதியில் பல ஊர்கள், மொழி கலாச்சாரம் உணவு, எல்லாம் எனக்கு இன்பமே ஆனந்தமே, எனவே எல்லோரும் இது போல இன்புற்று இருக்க வேறு ஒன்றும் அறியேன் பராபரமே.

Raghunathan Sundararaman

17 06 2017 · Jubail, Saudi Arabia ·

சுய தூண்டுதல் அதுவே உண்மையான தூண்டுதல், அதுவே இயற்கை, சாசுவதம், எல்லா ஜீவராசிகளின செயல்கள் அனைத்துக்கும் காரணம் இந்த இயற்கையான தூண்டுதல் ,அதனால் ஆன செயல்கள், இயக்கம், இயங்க காரனகர்த்தாக்கள் அவைகள் அனைத்தும் இயங்க வேண்டிய காலக் கட்டத்தில் அதனதன் வேலைகளை, கடமைகளை செய்ய ஆரம்பித்து விடும், அதற்கான விதிகப்பட்ட காலக் கெடு வரை, இது இயற்கையின் மிக கீழ் நிலையில் , நிலை மூலாதாரம்,முக்கியமாக உடல்ரீதியாக அனைத்தும், இந்த வயிற்றுப் பசி, உடல்பசி, காம்ம், சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை, இப்ப கேள்வி இது மட்டும் தான் இயற்கையா என்று?

இல்லை, மேல குறிப்பிட்டது கீழ் நிலை, இதற்கு மேலே பல நிலைகள், இறுதி நிலை சகஸ் நாம்ம் அது மிக உயர்ந்த நிலை, இந்த குண்டலீனியின் பயணத்தின் ஏழாவது நிலை, தன்னை முற்றிலும் அறிந்த நிலை, அந்நிலை கண்ட பின், காண வேண்டியது என்று ஒன்றும் இல்லை, இயங்குபவனும் நானே , இயக்கப்படுபவனும் நானே, நீயும் நானே ,நானும் நீயே, இப்படி எல்லாம் என்னை எழுத, மற்றவர்களை எழுத தூண்டுவது இந்த இயற்கை தூண்டுதலின் சற்று உயர்நிலை, இவை படிப்படியான நமது உள் உணர்வின் தூண்டுதலின் முன்னேற்றத்துக்கான அறிகுறிகள், ஆனால் என்ன பிரச்சினை ?அதே நோக்கமாக, குறிக்கோளாக ,சராசரிகள் மேலே உயர்வது இல்லை, அப்படி உயர்வதற்கான அடிப்படை யோக்கியதாம்சங்கள் இருந்தும், பலருக்கு சான் போன முழம் சறுக்குது.

உண்மையான வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல் ,சர்தான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல், எண்ணித் துணிந்தால், முடிந்தால், முக்தி கிடைக்காதா, கிடைக்கும் கட்டாயம்

 

17/06/2017

யாரையும் காவல் துறை கைது பண்ண வேண்டிய அவசியம் இல்லை, அவரவர்கள் அவரவர்களுக்கு நிர்பந்த கைதிகள், சூழ்நிலை கைதிகள் ,இருப்பனுக்கு இப்படியே இருக்ககனும்னு கவலை, இல்லாதவனுக்கு இல்லையேன்னு, இருந்தும் இது போதுமான்னு ,என்னத்த சொல்ல, உனக்கு என்னப்பா எல்லாம் பசங்க, எனக்கு கட்டிக் கொடுக்க நான்கு பெண்கள், இப்படி கோடு போட்ட அவனவன் பக்கத்தில் ரோடு, மாதம் ஐந்து இலக்கில் சம்பளம், ஆனா முகத்தில் எப்பொழுதும் பீதி, ஏதோ தொலைத்து விட்டால் போல்

நான் நினைத்தேன் 2006 இவ்வளவு நாள் ஊர் சுத்தி ஆச்சு, சரி குடும்பத்தை விட்டு ஒரு மூன்று வருடங்கள் வெளி நாட்டில் , கணிசமான தொகையை தனியார் வைப்பு நிதி் ,மாத வட்டி அப்புறம் ஹாயா, ஆனா தெரிந்த்து, வட்டி மட்டும் தான் அதுவும் தொடர்ந்து உத்தரவாதம் இல்லை ,அப்ப முதல் திருப்பதி கோவிந்தா அப்ப ஓடு எதுக்கு நாளைக்கு, நாளைக்குன்ன காலக் கெடு, அப்ப நீ இருப்பியா ,அதனால் தான் அரசாங்கம் ஓய்வு வயது

போய்யா போதும் வேலை பார்த்தது, நீ பார்க்க வேண்டிய பல இருக்கு ,போய் நிர்பந்தங்களை நிர்பந்தம் ஆக்கி சந்தோஷமா இருன்னு ,அதான் இப்ப உனக்கு் உத்யோக ஒய்வுன்னு நிர்பந்தம் புரியுதா?.

குழந்தையும் தெய்வமும் குணத்தால ஒன்று, குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று ,நடந்தது நினைப்பது எல்லாம் துயரம் என்று ,ஞானிகளும் மேதைகளும் சொன்னால் அன்று, இது பரீபூர்ன உண்மை ஏன்னா மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு ,அதை தாவ விட்டால் தப்பி ஓட விட்டால், பாவத்தில் ஏற்றிவிடும்,ஒருவன் மனது ஒன்பதடா ,அதில் ஒளிந்து கிடப்பது என்பதடா, உருவத்தை பார்ப்பவன் மனிதனடா ,அதில் உள்ளத்தை கான்பவன் இறைவனடா ,அதான் நேற்று நான் ஒரு குழந்தையுடன் பெங்களூரீல் , பார்க்க அது புன்னகைக்க ,எவ்வளவு சந்தோஷம் இந்த மனக் கவலை எல்லாம் போயே் போயிந்தி
நான் நினைத்துப் பாரக்கிறேன் வளர வளர மனதில், சிந்தனையில எண்ணங்களில் எவ்வளவு மாற்றங்கள் ,ஆசா பாசங்கள், ஆசைகள் ,இந்த காம் குரோத லோபங்கள் பலரை உடலால சொல்லால் மனதால் பலரை காயப் படுத்திகிறோம், காயப்படுகிறோம் அதான் நமது கீதை எவன் ஒருவன் இந்த ஆத்மா இந்த சரீரத்தில் இருக்கும் பொழுதே அதனால் ஏற்படும காம குரோத் லோபம் அதன் வேகத்தை தாக்கத்தை தடுத்து ஆட் கொள்கிறானோ அவனே சுகம் பெற்ற மனிதன் என்று ,இந்த் குணம் இயற்கையகவே குழந்தைகளுக்கு.
14/06/2017
வாழ்க்கையில் வெற்றி கண்ட பிரசத்தி பெற்ற மனிதர்கள், எப்பொழுதும,் எங்கு போனாலும் ,தன் கையில் வைத்திருப்பது இந்துக்கள்ன பகவத் கீதை உதாரனம் விவேகானந்தர், மகாத்மா காந்தி அடிகள் இப்ப சமீபமாக நமது மதிப்பிற்குறிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இது சில உதாரனம் இவர்களைப் போல பலர,் ஏன் இஸ்லாத்தை மார்க்கமாக கொண்ட மறைந்த ராஷ்டரபதி ்டாக்டர் அப்துல் கலாம். ஏன்னா கீதை மதப் புத்தகம் என்பதை விட மனித இயல் புத்தகம் அதான் சாராம்சம் ,திரும்பத் திரும்ப சமநிலை ,சமனபாடு ,இப்படி சுகம், துக்கம், கோபம் ,தாபம் ,வெற்றி ,தோல்வி, வெப்பம், குளிர் ,இவைகளைக் கண்டு தளராதே, இவைகள் வந்து போய் கொண்டு இருப்பவை, நிரந்தரம் அற்றவை, புகழ்ச்சி, இகழ்ச்சி ,மானம், அவமானம் அவைகளை சட்டை செய்யாதே, உனது கடமைகளை செய்து கொண்டிரு, உனது கருமத்தில் காட்டும் திறமையே யோகம் எனப்படும்
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு் சகிப்புத்தன்மை, பொறுமை அவசியம் ,ஆனா கீதை கோழையாக இரு என்று சொல்லவில்லை, ஒரு இடத்தில் அர்ஜூன்னிடம் இந்த புனிதப் போரில் இது எனது கடமை ,தர்மத்தைக் காக்க, அதர்மத்தை அழிக்க, எனவே இந்த யுத்ததில் அனைத்து எதிரிகளையும் அழித்தாலும், நீர் எந்த பாவத்தையும் சுமக்கப் போவதில்லை என்று இப்படி,
Yasya n ahamkrto bhavo Buddhir yasya lipyate Hatta pi imam i lokan Na hanti na nibadhyate
He who is established with a feeling, I am not the agent and whose mind is consequently unsullied by attachments he kills not really, nor he is bound ,even though he annihilates all beings
இப்படிச் சொன்னதால் அவனவன் அரிவாள் துப்பாக்கி எடுக்கனும்னு அர்த்தம் இல்லை, உனது பக்கம் நியாயம் தர்ம்ம் இருந்தால், கோழையாக இல்லாமல் ,போராடு என்று அதன் அர்த்தம்.

 

12/06/2017

வாழ்க்கை அதன் விளக்கம,் இருந்தோம், இருக்கிறோம், இருப்போம் என்பதா, அல்லது இது நல்ல சந்தர்ப்பம் நழுவ விடாதே, அனுபவி ராஜா அனுபவி ,பின் ஆடும் வரை ஆட்டம் ,ஆயிரத்தில் நாட்டம் ,கூடி வரும் கூட்டம் ,கொள்ளி வரை வருமோ, எவ்வளவு தான் வேதாந்தம் ஆண்மிகம் மெஞ்ஞானம் கண்டாலும் ,காலன் வரும் நேரம், அனைவருக்கும் சற்று பீதி, மரண பயம் அதை பரிபூரனமாக வென்றவன் யார்?, இருக்கும் போது ஆயிரம் விவாதங்கள் , மேதாவித்தனங்கள், ஆணமிகவாதி, பகுத்தறிவு வாதி பல மத்மாரக்கங்கள் நான் சொல்வது சரி, இல்லை நீ தவறு நானே சரி்,ஆனால் இறுதி மூச்சு அடங்கும் தருணத்தில் என்ன நிலை, மரணம் அதற்கு பின் என்ன இது கேள்விக்குறி, புரியாத புதிர்,

அறிந்தவர் உணரந்தவர், தெளிந்தவர் என்று அறியப்படுவார்கள், எந்த்நிலையில் ,எந்த் உணர்வில் ,இதற்குப் பிறகு இப்படித்தான், இது தான் என று ஆணித்தரமாக, இல்லை உண்மையில், இப்படி இருக்கலாம், இப்படி ஆகலாம் என்ற அனுமானம் தான், அதற்குப் பின் என்ன ஆகும், ஏது ஆகும், அதை யார் அறிவான், சராசரிக்கு எல்லாம் வெறும் சூன்யம்.

எனவே தான் கீதை ஸாங்கியமும் யோகமும் இரண்டையும் ஒன்றாக கண்டவனே நன்றாக கண்டவன் என்று, ஸாங்கியம்ன ஞானம் contemporaries அதாவது சிந்தனையால் அறிவால் தெளிவு, யோகம் எனபது பற்று அற்ற செயல் un concerned for the fruit of action, இரண்டும் ஒன்று ,ஆனாலும் கண்ணன் ஸாங்கியத்தை விட யோகம் சிறந்த்து என்று, ஏது சராசரிகளுக்கு எளிதோ அதுவே நியம்ம் , சட்டம் ,புரியாத அல்லது புரிந்து கொள்ள முடியாத விஷ்யங்களை ஆராயந்து தெளிவதை விட ,சராசரி மனிதனாக அவன் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்து நல்ல தகப்பனாக, மகனாக, மனைவியாக, தாயாக, வாழந்து மடிதலே மேல் என்று அப்புறம் ஈஸ்வரோ ரக்க்ஷதோ

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s