அதோ அந்த நிலாத்தொடங்கும் அடிவானத்தில்..

 

அதோ அந்த நிலாத்தொடங்கும் அடிவானத்தில்..

தன் கூர்மையான மூக்கை பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறது நட்சத்திரக் குருவிகள்..

இனி அவை வெளிச்சம் குடித்து தன்னை மினுக்கிக்கொள்ளும் விடியும் வரை..

குளிர்ப்போர்வையை தூக்கிவந்து அப்படியே சுற்றி மூடிக்கொள்ளும் தென்றல்..

தென்னங்கீற்றோலையில் காற்றின் தாளத்தில் தொட்டிலாடிக்கொண்டிருக்கும் செம்மூக்குக் கிளிகள் என…

இரவின் ஆட்சி ஜெகஜோதியாக தொடங்கிவிட்டபோதிலும்..

மேகப்பொதிக்குள் உன் பாதம் தெரிகிறதாவென நித்தமும் தேடிக்கொண்டிருக்கிறேன்..

என் கந்தர்வகுமாரா..

 

 

அந்த நீளமான பாதை தொடங்கிய இடத்திலிருந்தே வளைந்தும் வளைந்துகொடுத்தும் தான் சென்று கொண்டிருக்கிறது..

நெடுவயலின் பச்சைவாசனைகளும்,
திடுமென கடந்து செல்லும் சிற்றோடைகளும்…

கூடவந்து இணைந்து காரணமில்லாமல் விலகிப்போகும் தனிப்பாதைகளும்…

வெப்பமும், பனியும் மழையும் தொட்டுவிலக உணர்வுகளை உறிஞ்சிக்கொண்டு…

அப்படியே அசையாமல் கடந்துபோகும் நீள் நெடும்பாதை
சென்று சேரும் இடம்..

பிரபஞ்சத்துக்குள் இருக்கும் இன்னொரு சொர்க்கமாக இருக்கக்கூடும்.

 

கோவை ஆர்.எஸ்.புரத்தில் கல்லூரி பேராசிரியர் அன்பு சகோதரர் ஒருவரின் புதிய டிரஸ்ட் ஒன்றின் துவக்கவிழாவில் திரளான கூட்டத்தில் ஒரு ஓரமாக இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

முதல் இன்விடேஷன் உங்களுக்கு தான் மேம்..வழக்கம் போல சாக்கு சொல்லி வராம எஸ்கேப் ஆகிடாதீங்க என்று சொல்லி பத்திரிக்கையை கொடுத்துவிட்டு கண்டிப்பா வரேன் என்ற அஷ்யூரன்ஸ் வாங்கிக்கொண்டுதான் போனார்.

மிக உருப்படியான சமூகத்திற்கு தேவையான காரியங்களை இதுவரை அவர் செய்துகொண்டிருக்கிறார். சேவை அமைப்பை இதுவரை உருவாக்கவில்லை. இப்போதுதான் அதை டிரஸ்ட் என்ற அமைப்புக்குள் கொண்டுவந்திருக்கிறார். வாழ்க அவருடைய தேசத்தொண்டு.

வேடிக்கை பார்த்தல் என்பது நிஜமாகவே மிக இனிமையான விஷயம். நிஜமாகவே ஏகப்பட்ட வேலைப்பளுவுக்கிடையில் இந்த வேடிக்கை பார்க்க கிடைத்த வாய்ப்பென்பது கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள கிடைத்த வாய்ப்பு. அடுத்து நீங்க பேசுங்க என்று யாரும் மேடைக்கு அழைக்காமலும் தொலைபேசிகளை சைலண்ட் மோடில் போட்டுக்கொண்டும் நினைவுச்சிறைகளில் ஏதுமின்றி சும்மா வேடிக்கை பார்த்தல் மிகப்பெரும் இனிமை..

குட்டி பட்டுப்பாவாடை சட்டைகளில் கைகளில் வரவேற்பு டேபிள்களிலிருந்து எடுத்த ரோஜாக்களோடு ஓடிக்கொண்டிருக்கும் குட்டிக்குழந்தைகள், துருதுருவென ஓடியபடி விழாக்களுக்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் கல்லூரி மாணவர்கள், புதிதாய் சேலை கட்டிக்கொண்டு அதை ஒரு கையிலும் மல்லிகைச்சரங்கள் விழுந்துவிட்டதா என தலைமுதல் கால் வரை கவனங்கள் கொண்டு குறுக்கே நெடுக்கே நடக்கும் கல்லூரி மாணவிகள், பட்டுச்சேலை சரசரக்க வைரமூக்குத்தியை பட்டுப்புடவை நுனியில் பாலீஷ் போட்டுக்கொண்டே விழாவை கவனிக்கும் அம்மணிகள், விழாவை ஒரு கண்ணும் பிஸ்னஸ் மெயிலுக்கு ஐ போனில் ரிப்ளைகளை பறக்கவிட்டுக்கொண்டிருக்கும் கனவான்கள் என விழா சர்வ லட்சணங்களோடு களைகட்டிக்கொண்டிருக்கிறது.

என் அருகில் ஒரு குட்டி பிரில் கவுன் போட்ட மூன்று வயது ரோஜா..அவள் மாமாவிடம் மாமா அந்த சேரை இங்க போடு என்று உத்தரவு போடுவதும் அவர் சேரை நகர்த்திப்போட்டதும் அதில் ஏறாமல் மீண்டும் அங்க போடு இங்க போடு என அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருக்கிறது.

மேடையில் நாட்டின் ஏழ்மை நிலை குறித்து புள்ளிவிவரத்தோடும்..டிரஸ்டின் இனி எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளும் பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க…
குழந்தைகளின் உலகம் கையில் கிடைத்த சாக்லேட்டுக்குள்ளும், ரோஜாப்பூக்களுக்குள்ளும்..மாமாக்களை வம்பிழுப்பதுமாக நகர்ந்து கொண்டிருக்கிறது….

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s