கொட்டாங்குச்சி Pavlovian reflex = கிறிஸ்தவம் இம்ப்ரிண்டிங் method

கொட்டாங்குச்சி:
————————–

என் உறவினர் ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். அவர்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே தாயார் இறந்துவிட்டார். முதல் இரு பையன்களுக்கும் அப்போது மூன்று மற்றும் ஐந்து வயது. கடைக்குட்டிக்கு அப்போது ஒரு வயதுதான் இருக்கும். பாட்டி வீட்டுக்கு அவனை அனுப்பிவிட்டார்கள். பெரியவர்கள் இருவரையும் தந்தையே வளர்த்தார்.

அல்லது டார்வினிஸ தத்துவப்படி வளரவிட்டார். இருவரும் மிக உக்கிரமாக சண்டை போடுவார்கள். அவர்கள் அப்பா கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே மாட்டார். ரொம்ப இரணகளமாகிவிட்டால், இருவரையும் ஒரு அறையில் அடைத்துவிட்டு, “உள்ளயே சண்டை போட்டு தீத்துக்கோங்கோ. வெளில வரச்சே ஒரு மூச்சு பேச்சு கேக்கக்கூடாது. இங்க நான் படிக்கறதா வேண்டாமா?” என்று மிரட்டல் மட்டும் போடுவார். படிப்பது சாண்டில்யன் மட்டுமே!

இரு வருடங்கள் கழித்து, மூன்று வயதாகிவிட்ட கடைக்குட்டி தந்தை வீட்டுக்கே நிரந்தரமாகத் திரும்பி வந்தான். அண்ணன்கள் இருவரும் ஏழெட்டு நண்பர்களோடு மாடியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். கடைக்குட்டி ரொம்ப ஆர்வத்தோடும், அண்ணன்கள் மீது பாசத்தோடும் மாடிக்குப் போனான்.

“அண்ணா, என்னையும் வெளையாட சேத்துக்கோ.”

“முடியாது போடா. புதுசா வந்தவன எல்லாம் சேத்துக்க முடியாது” என்று பெரியவன் சொல்ல அடுத்தவன் ஆமோதித்தான்.

கெஞ்சல், அழுகை எதுவும் செல்லுபடியாகவில்லை. பக்கத்து வீட்டுப் பையன், “டேய் பாவண்டா, சின்ன பையந்தான? சேத்துக்கலாமே?” என்று பரிந்துரைக்க அவனுக்கு கிரிக்கெட் குலாக் (gulag) தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனை பெற்றவர்கள் பேட்டிங், பௌலிங் செய்ய முடியாது. மாடிப்படியருகில் ஃபீல்டிங் மட்டும்தான் செய்யவேண்டும். எவன் சிக்ஸர் அடித்தாலும் படியிறங்கி அடுத்த தெரு வரை ஓடி பந்து பொறுக்கவேண்டும். பந்து சாக்கடையில் விழுந்தால் அதை கழுவிக்கொண்டு வரவேண்டும். ஒரு மணி நேரத்தில் நொந்து நூலாகிவிடுவார்கள்.

கடைக்குட்டி அப்பாவிடம் முறையிட்டான், “என்னயும் சேத்துக்க சொல்லுப்பா.”

“ம்ஹும், முடியாது. நீயே பாத்துக்கோ. அப்பா முக்கியமா படிச்சுண்டு இருக்கேன். அண்ணாகிட்ட என்ன பண்ணினா சேத்துப்பனு கேளு. அவாளே சொல்லுவா. அதே மாறி நடந்துக்கோ. அழுமூஞ்சியா போனா சேத்துக்க மாட்டா. சிரிச்சுண்டு போய் கேளு.”

கடைக்குட்டிக்கு டார்வினிஸ தத்துவம் மூன்று வயதிலேயே புரியத் தொடங்கியது. இந்த முறை அழுகை, கெஞ்சலின்றி, போலி சிரிப்போடு மாடிக்குப் போய், “அண்ணா, நான் என்ன பண்ணினா வெளயாட சேத்துப்ப?” என்று கேட்டான். இரண்டாவது அண்ணன், “எப்பிடியும் சேத்துக்க மாட்டோம்” என்று சொல்லி முடிக்குமுன் பெரியவன், “இருடா, குட்டி எவ்ளோ அழகா சிரிச்சுண்டு கேக்கறது. ஒரு கண்டிஷன்ல சேத்துக்கலாம்” என்றான்.

இரண்டு அண்ணன்களும் ஆலோசனை நடத்தினார்கள்.

“குட்டி கீழ போய் ஒரு கொட்டாங்குச்சி எடுத்துண்டு வா” என்றான் பெரியவன். கடைக்குட்டியும் கீழேயிருந்து கொட்டாங்குச்சி எடுத்துக்கொண்டு வந்தான்: “இப்போ என்ன அண்ணா பண்ணனும்?”

“அண்ணாலாம் வெளயாடறச்சே ரொம்ப கொசு கடிக்கறதோல்லியோ? அதனால நீ என்ன பண்ற ஒவ்வொண்ணா மாடில இருக்கற அந்த கொசுவ எல்லாத்தயும் அடிச்சு இந்த கொட்டாங்குச்சில ரொப்பி எடுத்துண்டு வர. அப்டி வந்தா உன்ன கிரிக்கெட் வெளயாட சேத்துப்போம். தினமும் ஒரு கொட்டாங்குச்சில கொசுவ அடிச்சு ரொப்பி கொண்டு வந்தா டெய்லி வெளயாட சேத்துப்போம். சரியா?”

“சரி அண்ணா.”

தினமும் வெற்றிகரமாகக் கொசு அடித்துக் கொட்டாங்குச்சியில் நிரப்பி கிரிக்கெட் அணியில் இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட கை இன்று மருத்துவ சர்ஜரி செய்கிறது. ஆனாலும், இப்போதும் சாயங்காலமானால் கொசுக்களை அடித்துக் கொட்டாங்குச்சியில் நிரப்பிக் குப்பையில் கொட்டிவிடுகிறான். அவனுடைய இந்த நடத்தை மட்டும் அவன் மனைவி, குழந்தைகளுக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

பையாலஜியில் இதை இம்ப்ரிண்டிங் என்று சொல்வார்கள். விஞ்ஞானிகள் கோன்ராட் லோரன்ஸ் மற்றும் நிகோ டிம்பர்ஜென் இதைப்பற்றி ஆராய்ந்து நோபல் பரிசு பெற்றார்கள். சிறுவயதில் சில சிந்தனைகளை மனதில் புகுத்திவிட்டால் அதை வாழ்நாள் முழுக்க அகற்ற முடியாது. நம் செயலுக்கும் விளைவுகளுக்கும் தொடர்பில்லாவிட்டாலும் மனது தொடர்பிருப்பதாக நம்பும். அபத்தமான விஷயங்களை மனது நியாயப்படுத்தும். அதுவே இயல்பாகவும் மாறிவிடும். கிறிஸ்தவமும் இவ்வாறாகவே மனதில் இடம் பிடிக்கிறது என்பதை Viruses of the Mind என்னும் கட்டுரையில் விஞ்ஞானி ரிச்சர்ட் டாக்கின்ஸ் விளக்குகிறார். அதன் கோட்பாடுகள் உண்மை என்று மனதில் புகுத்திவிட்டால், எந்த ஆதாரமுமின்றி கிறிஸ்தவம் நம்புவோர் மனதில் வியாபிக்கும் என்று விளக்குகிறார். கொசுக்களை அடித்துக் கொட்டாங்குச்சியில் நிரப்புவதாகட்டும் கிறிஸ்தவ மத நம்பிக்கை வழி செயல்படுவதாகட்டும் இரண்டுமே மெமெடிக் (memetic) வைரஸ்கள் நடத்தி வைக்கும் செயல்கள்தான்.

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s