சென்னை காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை, மற்றொரு காவல் ஆய்வாளர் படுகாயம்: ஒரு குற்றவாளியை சுட்டு கொலை செய்திருந்தால் ?

S.n. Ganapathi
59 mins ·
சென்னை காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை,
மற்றொரு காவல் ஆய்வாளர் படுகாயம்:
ஒரு குற்றவாளியை சுட்டு கொலை செய்திருந்தால் ? குரல் கொடுக்கும் இந்த அமைப்புகள்
1.மனித உரிமை கழகம்
2.சாதி கட்சி அரசியல்அமைப்பு
3.எதிர் கட்சி அரசியல் அமைப்பு மற்றும் இதர அரசியல் அமைப்புகள்
4.சமூக நல அமைப்பு
5.டிவி, பத்திரிக்கை கேள்வி
6.மாதர் சங்கம்
7.நீதிமன்றம்
8.பொது மக்கள்
இப்போது ஏன் வாய் திறக்க வில்லை ? சமூகத்தில் அனைவரும் மனிதர்கள் தானே ? உயிர் என்பது அனைவருக்கும் சமம் தானே ? நாங்கள் சீருடை அணிந்த சக மனிதர்கள் தானே ? ஒன்று நன்றாக தெரிந்துகொள்ளுங்கள், உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதே காவல் துறை தான், நாங்கள் இல்லை என்றால் நீங்கள் குரல் கொடுக்கவும் முடியாது, சுதந்திரமாக வேலை செய்யவும் முடியாது, சுதந்திரமாக மனைவி மற்றும் குழந்தைகளோடு தூங்கவும் முடியாது, தினம் தினம் பயந்து செத்து பிழைக்க வேண்டும் நீங்கள். காவல்துறைக்கு மட்டும் நீங்கள் ஏன் குரல் கொடுப்பதில்லை ? எங்களுக்கு அந்த கொள்ளையர்களை என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். நீங்கள் வாயை மூடி கொண்டு வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும். உங்களுக்கு பயந்து தான், துப்பாக்கி என்ற ஆயுதம் இருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் தவிக்கிறோம். ஒரு காவல் ஆய்வாளர் என்பவர் 10 ஆயிரம் பொதுமக்களுக்கு சமமானவர். காவல் துறையில் பணி புரிவது என்பது அவ்வளவு எளிதான பணி அல்ல. ஒருவரை கொலை செய்தாலே ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கொடுக்கும் நீதிமன்றங்கள் இந்த 10 ஆயிரம் பேருக்கு சமமான ஒரு காவல் ஆய்வாளரை கொலை செய்து விட்டார்களே கொள்ளையர்கள், இப்போது அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள் நீங்கள் ? இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு 11 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது, இன்னும் அதற்கு தீர்வு வரவில்லை. இந்த கொலை சம்பவங்களில் அதிகபட்சமாக நீங்கள் மரண தண்டனை கொடுத்தாலும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், குடியரசு தலைவர் கருணை மனு நிராகரிப்பு என்று சொல்லி அவனை தூக்கில் போட குறைந்த பட்சம் 30 ஆண்டுகள் ஆகும். குற்றவாளிக்கு 60 வயது ஆன பிறகு அவனை தூக்கில் போட்டால்தான் என்ன ? போடவில்லை என்றால் தான் என்ன? அதுமட்டுமல்ல அரசுசார்பில் அவனுக்கு கோடி கணக்கில் பணம் செலவு செய்யபடும். இது தேவையா? முதல்ல சட்டத்தை மாத்துங்க அல்லது நீங்க மாருங்க. இதை தடுக்க ஒரே வழி
“காவல் துறை சார்பில் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை என்கவுண்டர் மட்டுமே” நிரந்தர தீர்வாக இருக்கும். அதற்கு நான் மேலே சொன்ன அமைப்புகள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எப்போதும் நிலைநாட்டபடும். இறந்தவரின் குடும்பத்துக்கு அரசு எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர் உயிரோடு இருந்து அந்த குடும்பத்துக்கு அவராற்றும் செயலுக்கு ஈடாகாது (அன்பு, நிம்மதி, சந்தோசம் )http://www.news18.com/news/india/kolathur-burglary-case-tn-cop-shot-dead-in-pali-rajasthan-police-assure-theyll-nab-accused-1603317.html
This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a comment